புனேயில் நடைபெற்ற 8வது ஐ.பி.எல் தொடரின் 14வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான முரளி விஜய் ஓட்டகளின்றியும், ஷேவாக் 11 ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சாகாவும் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்தது.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 33 ஓட்டங்களும், அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி அரைசதம் கடந்து 60 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் கொல்கத்தா சார்பில் உமேஷ் 3 விக்கெட்டும், மோர்னே மார்கல், ஆண்டரி ரஸல் இருவரும் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 156 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 159 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய உத்தப்பா 13 ஓட்டங்களும், அணித்தலைவர் கவுதம் கம்பீர் 11 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதிகபட்சமாக ஆண்ட்ரி ரஸல் அரைசதம் கடந்து 66 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் யூசுப் பதான் 28 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் ரஸல் தெரிவானார்.
0 comments:
Post a Comment