↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்றைய முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. அகமதாபாத், சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இப்போட்டி இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. இரு அணிகளுமே இந்தத் தொடரில் இதுவரை ஒரு தோல்வியைும் தழுவாத அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் மெக்கல்லம் 12, ரெய்னா 4, டூபிளஸ்ஸிஸ் 1 என அவுட்டானதால் அணி தடுமாற்றத்துக்குள்ளானது. இருப்பினும் மறுபக்கம் வேயன் ஸ்மித் ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அவருக்கும் ஆப்பு வைத்தார்கள் ராஜஸ்தான் பவுலர்கள். அதிரடியாக ஆடி வந்த அவரை 40 ரன்கள் எடுத்த நிலையில் பால்க்னர் அவுட்டாக்கி வெளியேற்றினார். இதனால் சென்னைக்கு மேலும் ஒரு கை குறைந்தது.
அதன் பின்னர் இணைந்த டோணியும், பிராவோவும் சிறப்பாக ஆடினர். குறிப்பாக பிராவோ ஆட்டம் பிரமாதமாக இருந்தது. சரியான பந்துகளாகப் பார்த்துப் பார்த்து அடித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் கேப்டன் டோணி 37 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில், அங்கித் சர்மா, மோரிஸ், தாம்பே, பால்க்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இன்று மாலை 4 மணிக்குப் போட்டி தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதிய இப்போட்டி நடைபெற்றது.
போட்டியை ஆங்கிலத்தில் சோனி சிக்ஸும், இந்தியில் சோனி மேக்ஸும் ஒளிபரப்பின. இது தவிர தமிழ், தெலுங்கில் பார்த்து, கேட்டு ரசிக்க சோனி கிக்ஸ்ஸும், பெங்காலிக்கு சோனி ஆத்தும் உள்ளன.
இன்றைய போட்டியைப் பொறுத்தவரை சென்னை அணிக்கு பிரன்டன் மெக்கல்லம், டோணி, பிராவோ, சுரேஷ் ரெய்னா, வேயன் ஸ்மித் ஆகியோரும், ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, ஜேம்ஸ் பால்க்னர், டிம் செளதி, பிரவீன் தாம்பே ஆகியோர் இருந்தனர்.
இரு அணிகளும் இதற்கு முன்பு 15 போட்டிகளில் மோதி, அதில் சென்னை 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் 5 போட்டிகளிலும் வென்றன. அந்த வகையில் சென்னை அணியே பேவரைட்டாக இருந்தது.
நடப்புத் தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் மோதி நான்கிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணியை வென்று தொடர்ந்து 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்களெல்லாம் இருந்தனர். கேப்டன் விக்கெட் கீப்பர் டோணி, ஆசிஷ் நெஹ்ரா, பாபா அபராஜித், பிரண்டன் மெக்கல்லம், வேயன் பிராவோ, வேயன் ஸ்மித், பாப் டு பிளஸ்ஸிஸ், ஈஸ்வர் பாண்டே, மாட் ஹென்றி, மிதுன் மன்ஹாஸ், மோஹித் சர்மா, பவன் நேகி, ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாமுவேல் பத்ரீ, சுரேஷ் ரெய்னா, ரோனித் மோரே, மைக்கேல் ஹஸ்ஸி, ராகுல் சர்மா, கைல் அப்பாட், ஆங்குஷ் பெய்ன்ஸ், இர்பான் பதான், பிரத்யூஷ் சிங், ஆண்ட்ரூ டை, எக்லவ்யா திவிவேதி. சென்னை அணி போராடியும் வெற்றியடைய முடியவில்லை.
கேப்டன் ஷேன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னணி, ஜேம்ஸ் பால்க்னர், அஜிங்கியா ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ரஜத் பாட்டியா, டிம் செளதி, தவல் குல்கர்னி, அபிஷேக் நாயர், கனே ரிச்சர்ட்சன், பென் கட்டிங், கருண் நாயர், தீபக் ஹூடா, திஷாந்த் யக்னிக், விக்ரம்ஜித் மாலிக், அங்கித் சர்மா, ராகுல் தீவேதியா, பிரவீன் தாம்பே, கிறிஸ் மோரிஸ், திணேஷ் சலுங்கே, ஜுவான் தெரான், பிரதீப் சாஹு, பரிந்தர் சரண், சாகர் திரிவேதி. இன்றைய போட்டியில் ஷேன் வாட்சன் 73 ரன்களும், அஜிங்கியா ரஹானே 76 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.
Home
»
ipl
»
sports
»
sports.tamil
» ஐபிஎல்லில் முதல் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment