↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இனி ஆண்டில் பத்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டிப்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுபோன்ற தீர்மானங்கள் ஒவ்வொரு புதிய நிர்வாகம் பதவிக்கு வரும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன இதற்கு முன்.
ஆனால் கலைப்புலி தாணு தலைமையிலான அணி இந்த முறை பதவிக்கு வந்ததிலிருந்து பல நல்ல விஷயங்களை உறுதியாகக் கடைப் பிடித்து வருகிறார்கள். அவற்றில் முக்கியமானது, திரைப்பட வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவது. அதன் ஒரு பகுதியாகத்தான் ரூ 15 கோடி பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்படும் படங்களை ஆண்டின் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே வெளியிடுவது என்ற முடிவு.
நேற்று கூடிய தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், பெரிய படங்கள் அனைத்தும் இனி கீழ்வரும் நாட்களில்தான் வெளியாக வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அந்த நாட்கள்:
ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 பொங்கல்
ஜனவரி 26 குடியரசு தினம்
ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு
மே 1 உழைப்பாளர் தினம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 21 ஆயுத பூஜை
நவம்பர் 10 தீபாவளி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்
Home
»
cinema
»
cinema.tamil
» பெரிய பட்ஜெட் படங்களா... இனி இந்த பத்து நாட்களில்தான் ரிலீசாகணும்!- தயாரிப்பாளர் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment