↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இதுவரை விஜய் தான் இருவேடங்களில் நடித்த படங்களில் பெரிதாக கெட்டப் மாற்றம் செய்ததில்லை. அழகிய தமிழ் மகன், கத்தி போன்ற படங்களில் இரு வேடங்களுக்கும் மிகச்சிறிய வித்தியாசம்தான் காணப்பட்டது. இந்நிலையில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் சரித்திர படமான 'புலி'யில் இரண்டு வேடத்திற்கும் மிகபெரிய வித்தியாசத்தை கெட்டப்பிலும், நடிப்பிலும் காட்ட விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், தந்தை வேடத்திற்காக உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்ததோடு, அந்த கேரக்டருக்காக குரலையும் மாற்றி பேசவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அஜீத், விக்ரம், சூர்யா வரிசையில் உடலை வருத்தி விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். 'சதுரங்க வேட்டை' நட்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். இந்த படம் விஜய் பிறந்த நாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment