↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
parthibanஎந்த ஒரு விவகாரமான விஷயத்தையும் ஜாடை மாடையாக சொல்வதில் வல்லவர் நடிகர் பார்த்திபன்.

தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் ஆரம்பித்திருக்கும் பாஃப்டா என்ற புதிய பிலிம் இன்ஸ்ட்டியூட் துவக்க விழாவில் பார்த்திபனும் கலந்து கொண்டார் பார்த்திபன்.
அப்போது பேசிய பார்த்திபன், ஒரு பையன் தன் அக்காக்கிட்ட போய் செக்ஸ்ன்னா என்னாக்கான்னு கேட்டான். நீ அம்மாக்கிட்ட போய் கேளுன்னு சொன்னாங்க. உடனே கிச்சனுக்குப் போய் அம்மா செக்ஸ்ன்னா என்னம்மான்னு கேட்டான். அவங்களுக்கும் பயங்கர டென்ஷன். நீ போய் அப்பாக்கிட்ட போய் கேளுன்னு சொன்னாங்க.
அப்பாக்கிட்ட கேட்டா இந்தா குளிச்சிட்டு வந்துர்றேன்னு பாத்ரூமுக்குள்ள ஓடிப்போயி அவருடைய நண்பருக்கு போன் பண்ணி என்னுடைய பையன் செக்ஸ்ன்னா என்னான்னு கேட்கிறான். அவனுக்கு 5 வயசுதான் ஆகுது எப்படி சொல்றதுன்னு கேட்கிறார். அதுக்கு அவர், இந்தக்காலத்து பசங்க அப்படித்தான் ஆயிட்டாங்க…” எதாவது சொல்லி சமாளி என்று சொல்றார்.
அப்பா வெளியே வந்து “நானும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு”ன்னு சொல்றார். அவர் சொல்லிக்கிட்டிருக்கும் போதே அந்தப்பையன் நீ சொல்றதெல்லாம் இந்த பேப்பர்ல எழுத முடியாதுன்னு சொல்றான்.
என்னன்னு பார்த்தா ஒரு அப்ளிகேஷன் பார்ம்ல செக்ஸுன்னு போட்டு அதுக்கு நேரா male, female ன்னு ரெண்டு கட்டம் போட்டுருக்கு. இப்படித் எங்க ஆரம்பிச்சு எங்க முடியும்னு தெரியாம இருக்கிறது தான் ஒரு திரைக்கதையோட த்ரில்லிங்க்னு நெனைக்கிறேன் என்று கூறி மாணவர்கள் மத்தியில் செக்ஸ் கதை ஒன்றைச் சொல்லி கலகலப்பூட்டினார் பார்த்திபன்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top