அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். சிலர் தங்கள் ஊர்களில் பேனர் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
மேலும், சமூக வலைத்தள ரசிகர்கள் குட்டி தல என்ற டாக் கிரியேட் செய்து உலக அளவில் டரண்ட் செய்தனர். சென்னையின் பிரபல மருத்துவ மனையில் அஜித்தின் குழந்தையை பார்க்க கூட்டம் குவிந்தது.
ஆனால், அஜித் கேமரா முன்னால் தன் குழந்தையை காட்டவே இல்லை, சமூக வலைத்தளங்களில் பரவிய குழந்தை உண்மையில்லை என்று அஜித் தரப்பே உறுதி செய்தது.
இதெல்லாம் இருக்கட்டும், மருத்துவ மனையில் அஜித்தின் ரியாக்ஸன் என்ன? அதை பற்றிய தகவல்கள் இதோ....மார்ச் 1ம் தேதி ஷாலினி சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அஜித் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தார். இவர்களை வரவேற்க மருத்துவமனையின் சேர்மேன் வந்தார். பின் மார்ச் 2ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு குழந்தை பிறந்தது. குட்டி தல பூமியை பார்த்ததும் அஜித் தன் கை விரலை உயர்த்தி காட்டினார்.
இதை தொடர்ந்து அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள், வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஷாலினிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தான் விஜய்யின் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். (தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது.)
இதில் ஒரு படி மேலே சென்று குட்டி தல பூசம் நட்சத்திரம், கடக ராசி, இவர் மருத்துவம் சார்ந்த துறையில் படிப்பார், இவர் அஜித்திற்கு ராசியான குழந்தை என ஜாதகம் வரை பார்த்து விட்டார்கள்.
0 comments:
Post a Comment