பிரித்தானியாவின் Durham நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் Amy Dawson மற்றும் Gavin Golightly என்ற தம்பதிகளுக்கு சமீபத்தில் கோலகாலமாக திருமணம் நடந்துள்ளது.
காதலர்களான இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை ஒன்று உள்ள நிலையில், தற்போது அனைவர் முன்னிலையில் திருமணம் கைகூடியதால் Amy அளவற்ற மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சிகள் முடிந்து, முதலிரவு அறைக்குள் சென்ற பிறகு காதல் கணவரிடம் தனது கல்யாண ஆடைகளை கழட்ட உதவுமாறு Amy கேட்டுள்ளார்.
இதை கேட்ட Gavin Golightly தன் மனைவிக்கு உதவுவதற்கு பதிலாக கடும் கோபம் கொண்டு Amy-ஐ பிடித்து கீழே தள்ளிவிட்டு அவர் மீது ஏறி அமர்ந்து முகத்திலும் மார்பிலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
கணவரின் இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத Amy& வலியால் அலறி துடித்ததோடு, தன்னை அடித்தே கொன்று விடுவாரோ என மிகுந்த அச்சம் கொண்டுள்ளார்.
இதனையடுத்து குடும்ப நல மற்றும் சமூக ஒழுங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட Amy-ன் கணவர், தான் முதலிரவு நேரத்தில் மது அருந்திருந்த காரணத்தினால் தான் இவ்வாறு நடந்து கொண்டதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட Community Order எனப்படும் ஊதியம் இல்லாமல் உள்ளூர் பொது பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் Amy-க்கு இழப்பீடு தருவதுடன் அவருடன் இரண்டு வருடங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதுபற்றி Amy கூறுகையில், நான் முதலில் Gavin-ஐ சந்தித்த போது அவர் அன்பானவர் என்று தான் நினைத்தேன். அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
திருமண நாளன்று இரவுக்கு முன்பு வரை அவர் இப்படிபட்டவர் என்று நான் அறியவில்லை, நான் கர்ப்பமாக இருக்கும்போதுகூட என்னை அன்போடும் பரிவோடும் தான் கவனித்துக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறுகையில், Community Order குறித்த தண்டனை குறைவாக இருந்தாலும், தன்னிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என நீதிபதி கூறியது தனக்கு பெரும் ஆறுதலாக உள்ளதாக டாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், அவரிடமிருந்து விவாகரத்து பெற ஏற்பாடுகள் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment