↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் படு தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த ஆத்திரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக நேற்றிரவு இந்திய எல்லையில் ராணுவ நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன பாகிஸ்தானிய துருப்புகள். ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத துப்பாகிச் சூட்டினை நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் இரண்டு முறை அத்துமீறியுள்ளது. ஏற்கனவே நேற்று மதியம் சர்வதேச எல்லையில் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்த இரவுநேரத் தாக்குதல் ஆள்நடமாட்டம் இல்லாதப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பங்களில் அதிர்ஷ்டவசமாக எந்தஒரு சேதமும் இல்லை என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி எதிரொலியின் காரணமாகத்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கு பதிலடியாக பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ராணுவத்தினை எல்லைப் பகுதிக்கு துரத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
»
news
»
news.india
» உலக் கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலி – இந்திய எல்லையில் பாக். படைகள் தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment