↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டேரன் சமி, ஜான் மூனிக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் நெல்சனில் நேற்றைய உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் டேரன் சேமி எதிரணி வீரரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், பிடியை தவற விட்டதால் அயர்லாந்து வீரர் ஜான் மூனி சக வீரரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து போட்டி நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தியது. இதில் இருவரும் தவறை ஒப்புக்கொண்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் தலா 30 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top