↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் 8வது சீசனுக்கான ஏலம் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் சில வீரர்களை விடுவித்தும், சில வீரர்களை வாங்கியும் உள்ளது. முரளி விஜய் போன்ற வீரர்கள் அதிக தொகை காரணமாக வேறு அணிக்கும் மாறியுள்ளனர். மொத்தத்தில் இப்போது சென்னை அணி ஏலத்திற்கு பிறகு எந்த வடிவத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புளூ பிரிண்ட் இதோ:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர். அதில் 9 பேர் வெளிநாட்டு வீரர்களாகும்.
வீரர்களை வாங்குவதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணியுமே அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வரைதான் செலவிட முடியும் என்பது விதிமுறை. அந்த வகையில் சென்னை அணியிடம் தற்போது ரூ.70 லட்சம்தான் மிச்சமுள்ளது.
நேற்றைய ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்ட வீரர்கள்: மைக்கேல் ஹசி, இர்ஃபான் பதான், ராகுல் ஷர்மா, கைல் அப்பாட், ஆன்ட்ரூ டை, பிரதியூஸ் சிங், அன்குஷ் பைன்ஸ், ஏகலைவா திவேதி.
சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்: பென் ஹில்பென்ஹாஸ், ஜோன் ஹேஸ்டிங்ஸ், விஜய் சங்கர், டேவிட் ஹஸ்சி.
தொடரும் வீரர்கள்: டோணி, பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் பிராவோ, ஆஷிஷ் நெக்ரா, பாபா அபராஜித், ட்வைன் ஸ்மித், பாப் டு பிளெசிஸ், ஈஸ்வர் சந்திர பாண்டே, மேட் ஹென்ட்ரி, மிதுன் மன்காஸ், மோகித் ஷர்மா, பவான் நேகி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, சாமுவேல் பத்ரி, ரோனிட்.
அடுத்த அணிக்கு போனதில் முக்கிய வீரர்கள்: ஒப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பத்ரிநாத்.
சிஎஸ்கே பேட்டிங் வரிசை: டோணி, சுரேஷ் ரெய்னா, மெக்கல்லம், பாப் டு பிளெசிஸ், ட்வைன் ஸ்மித், மைக் ஹஸ்சி, பாபா அப்ராஜித். அன்குஷ் பைன்ஸ், ஏகலைவா திவேதி. இதில் கடைசி இருவரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களாகும்.
பவுலிங் வரிசை: நெக்ரா, ஈஸ்வர் பாண்டே, மோகித் ஷர்மா, சாமுவேல் பத்ரி, ரோன்ட் மோரே, பவான் நேகி, மேட் ஹென்ட்ரி, ராகுல் ஷர்மா, பிரத்யூஸ் சிங், கைல் அப்பாட்.
ஆல்ரவுண்டர்கள் வரிசை: ஜடேஜா, ட்வைன் பிராவோ, மிதுன் மன்காஸ், அஸ்வின், இர்பான் பதான், ஆன்ட்ரூ டை.
Home
»
csk
»
ipl
»
sports
»
sports.tamil
» ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு எப்படி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? வந்தது யார்.. சென்றது யார்..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment