காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் நேற்று முன்தினம் இரவு, அதாவது நேற்று
அதிகாலையில் லட்சுமிராய் போட்டிருந்த ஒரு ட்வீட் பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி விட்டிருக்கும் என்று சொல்லலாம். “ஓ மை காட்.. ஒரு வழியா நானும் என்னோட லவ்வரை இந்த காதலர் தினத்துல கண்டுபிடிச்சுட்டேன்”. இதுதான் அவர் போட்ட ட்வீட்..
ஆனால் அதற்கடுத்த சில நொடிகளில் “ஹாஹாஹா.. நல்லா ஏமாந்தீங்களா..! கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட இதயத்தை உடைச்சிருப்பேனோ..? ஆனால் எப்படி என்னை நேசிக்கும் அன்பு உள்ளங்களாகிய உங்கள் இதயங்களை என்னால் உடைக்க முடியும்.” இன்னொரு ட்வீட் போட்டு ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். “ஏம்மா இதுலகூடவா விளையாடுவீங்க.. என்னம்மா.. இப்டி பண்றீங்களேம்மா” என சொல்லத்தோன்றுகிறதோ..?
0 comments:
Post a Comment