கடந்த 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக ரிலீஸான 'என்னை அறிந்தால்' திரைப்படம் நல்ல வசூலை விநியோகிஸ்தர்களுக்கு வாரி வழங்கியதோடு இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 'என்னை அறிந்தால்' திரைப்படம் இன்றுமுதல் மொரிஷியஸ் நாட்டில் ரிலீஸ் ஆகிறது. 'தல அஜீத்' திரைப்படம் மொரிஷியஸ் நாட்டில் ரிலீஸ் ஆவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை ஹார்மொனிஸ் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆங்கில சப் டைட்டிலுடன் மூன்று தியேட்டர்களில் இந்த படத்தை மொரிஷியஸில் வெளியிடுகிறது.
0 comments:
Post a Comment