↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை ஒரு முறை கூட இந்தியாவை வீழ்த்தியதே இல்லை. உலகக் கோப்பபை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உலகக் கோப்பை போட்டிகளில் இன்றைய ஆட்டத்தோடு சேர்த்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியுள்ளன.
உலகக் கோப்பை போட்டிகளில் 6 முறையும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானால் இந்திய அணியை ஒரு முறை கூட தோற்கடிக்கவே முடியவில்லை.
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஒரு முறை கூட இந்தியாவை ஆல் அவுட் ஆக்கியது இல்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 1992, 1999 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இதையடுத்து இன்றும் பாகிஸ்தான் அணி ஆல் ஆவுட் ஆக்கப்பட்டது.
உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டி 1992ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அதன் பிறகு பெங்களூர்(96), மான்செஸ்டர்(99), சென்ச்சுரியன்(03), மொஹாலியில்(2011) நடைபெற்றது. இன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 6வது போட்டி நடைபெற்றது.
Home
»
sports
»
sports.tamil
» வேர்ல்ட் கப்: 6வது முறையாக பாக்.கை வீழ்த்திய இந்தியா... 99ல் இருந்து ஆல் அவுட்டாகும் பாக்.!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment