இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4வது ஒருநாள் போட்டி நெல்சன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
31வது ஓவரை ஹேராத், நியூசிலாந்து வீரர் எல்லியொட்டுக்கு வீசினார். அப்போது அதை அவர் நேராக அடிக்க, ஹேராத் அந்த பந்தை தடுக்க முயன்று, அருகில் இருந்த வில்லியம்சன் வைத்திருந்த துடுப்பாட்ட மட்டையில் காலை வைத்தார். இதில் அவரது துடுப்பாட்ட மட்டை எதிர்பாராத விதமாக சேதமாகியது.
இருப்பினும் வில்லியம்சன் இந்தப் போட்டியில் 103 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment