ஏய், மலை மலை, வாடா, வல்லக்கோட்டை போன்ற பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சண்டமாருதம். சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஓவியா, மீரா நந்தன், ராதிகா, சமுத்திரக்கனி, ராதாரவி, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சண்டமாருதம் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு சர்ட்பிகெட் கிடைத்துவிட்டது என்றும், சர்டிபிகேட் விபரங்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சரத்குமார்-ஏ.வெங்கடேஷ் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மகாபிரபு, ஏய், சாணக்யா ஆகிய மூன்று படங்களை இருவரும் இணைந்து கொடுத்துள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இந்த படத்தின் நான்கு பாடல்கள் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
0 comments:
Post a Comment