
அக்ஷ்ராஹாசன், சின்ன பொண்ணாக இருக்கும்போதே கமலும், சரிஹாவும் பிரிந்துவிட்டனர், ஆனால் இவர்களின் பிரிவு தான் தன்னை வலிமையானவளாக மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசன், ஷமிதாப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். தனுஷ், அமிதாப் பச்சன் நடித்துள்ள இப்படத்தை பால்கி இயக்கியுள்ளார். இப்படம் பிப்., 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் மும்பையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, எனது பெற்றோர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களிடமிருந்து நான் நிறைய கற்று கொண்டுள்ளேன். இருவரும் தங்களது திறமைகளில் வேறுபட்டவர்கள். இருவருமே எனக்கு நிறைய ஆலோசனை கூறுவார்கள், நானும் எனக்கு தேவையான ஆலோசனைகளை கேட்டு பெற்று கொள்வேன். என் பெற்றோர்கள் பிரிவை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என் பெற்றோரின் பிரிவு தான் என்னை வலிமையாக்கியுள்ளது. எனக்கு அவர்களது மகிழ்ச்சி தான் முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் என் அப்பா மற்றும் சகோதரி ஸ்ருதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன், அதோடு அதிக மகிழ்ச்சியும் அடைவேன் என்கிறார்.
0 comments:
Post a Comment