உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவின் வாய்ப்புகள் பற்றி டிராவிட் கூறியதாவது, இது மிகப்பெரிய சவால், எளிதானது கிடையாது, முற்றிலும் வேறு சூழல்களில் நாம் விளையாடவிருக்கிறோம்.
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பிட்ச்கள் எதிர்பார்த்தை விட மெதுவாகவும் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாகவும் அமைந்தால் 2 அல்லது 3 ஸ்பின்னர்களைக் கூட அணியில் சேர்த்து விளையாடலாம் ,இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.
போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இவர்கள் தவிர, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளும் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது.
இதில் நெருக்கடி தருணங்களில் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும். இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறும்.
அந்த மட்டத்தை எட்டுவதற்கான வீரர்கள் நம்மிடையே உள்ளனர். ஆனால் அதன் பிறகு 3 போட்டிகளில் தொடர்ந்து அதிசிறப்பாக விளையாட வேண்டும்.
இந்த நிலைக்கு முன்னேறினால் 11 வீரர்களும் டாப் ஃபார்மில் இருப்பது அவசியம்.
விராட் கோஹ்லி ஆட்டத்தின் 10 அல்லது 12 ஓவர்கள் சென்ற பிறகு களமிறங்க வேண்டும், அப்போதுதான் அவர் ஒரு பெரிய இன்னிங்ஸை திட்டமிட முடியும்.
ரோஹித் சர்மா காயம் பெரிய பின்னடைவுதான்,. ஷிகர் தவான் இன்னும் கொஞ்ச நேரம் கிரீஸில் நிற்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், டோனியும், விராட் கோஹ்லியும் மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்று விட முடியாது, குறைந்தது 6 வீரர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment