
தனுஷ் நடித்த ஷமிதாப் படம் ஹிந்தியில் ரிலீசாக தயாராகியுள்ளது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தை இயக்குனர் பால்கி இயக்கியுளார். தனுஷ்க்கு ஜோடியாக கமலஹாசனின் இளைய மகள் அஷரா ஹாசன் நடித்துள்ளார்.
படத்தின் கதையும், ரஜினியின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருப்பதாக இப்பொழுது ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது.
கதைப்படி நொறுக்கு தீனி விற்பவளின் மகனாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். பஸ் டாண்டில் நொறுக்கி தீணீ விற்க தாயாருக்கு உதவும் தனுஷ் ஒரு கட்டத்தில் பஸ் கண்டக்ராகிறார்.
அவருக்கு எந்நேரமும் பாட்டிலும் கையுமாக குடிகாரன் வேடத்தில் நடித்திருக்கும் அமிதாப் உதவுகிறார்.
ரஜினிகாந்த் சினிமா உலகில் பிரவேசிப்பதற்கு முன்பு பெங்களூரில் கண்டக்டராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, 'ஷமிதாப்' திரைப்படம் ரஜினி காந்தின் வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளதை இதன் மூலம் ரசிகர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment