இன்று (ஜனவரி 31ம் தேதி) நடைபெற உளள பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலில், சல்மான் கான் கலந்துகொள்ளாதது, அவரது ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியினை, கடந்த சில வாரமாக, சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சிக்காக, அவர் கொடுத்திருந்த கால்ஷீட், கடந்த 4ம் தேதியே முடிவடைந்தது. நிகழ்ச்சிக்குழுவினர், கால்ஷீட்டை நீட்டித்து தர பலமுறை கோரியும், பஜ்ரங்கி பைஜான் படத்தை கருத்தில் கொண்டு, கால்ஷீட்டை நீட்டிக்க சல்மான் தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன்காரணமாக, இன்று நடைபெற உள்ள பைனல் ஷோவை, ஃபரா கான் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment