↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழிலிருந்து தெலுங்குக்கு டப்பிங் செய்யப்படும் படங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கெனவே, சூர்யா, கார்த்தி, விஷால், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் ஆன வேலையில்லா பட்டதாரி படம் மூலம் அந்த வரிசையில் தனுஷும் இடம் பெற்று விட்டார்.
ரகுவரன் பி.டெக் என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியான அந்தப் படம் தெலுங்கிலும் ஓரளவிற்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாம். அதனால், தனுஷ் நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள அனேகன் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அனேகடு படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
கே.வி.ஆனந்தும் சூர்யா நடித்து இயக்கிய அயன், மாற்றான் ஆகிய படங்கள் மூலம் அங்கு அறிமுகமானவர்தான். அதோடு, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்திக்கும் நீண்ட நாட்களாகவே தெலுங்கு ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர்தான். இதெல்லாம் தெலுங்கு வினியோகஸ்தர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்த படத்திற்கு முன்பாக அஜித் நடித்துள்ள என்னை அறிந்தால் படமும் என்தவாடு கானி என்ற பெயரிலும், விஷால் நடித்துள்ள ஆம்பள படம் தெலுங்கில் மகா மகாராஜு படமும் வெளியாக வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் படங்கள் வருவதால் அதற்கு ஏதாவது கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் மறுபக்கம் குரல் எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment