தனுஷை தவிர்த்தது ஏன்?- காஜல் பதில்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். காஜல் அகர்வாலோ பறவை என்றாலே நடுங்குவாராம். அந்த பயத்திலிருந்து தற்போது மீண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:பறவைகள் என்றால் எனக்கு பயம். குறிப்பாக மயில் என்றால் அருகில் செல்லவே பயப்படுவேன். ஆனால் தனுஷுடன் நடிக்கும் ‘மாரி‘ படத்தில் விதவிதமான பறவைகளுடன் நடிக்க வேண்டி இருந்தது. யூனிட்டில் இருந்தவர்கள் எனக்கு தைரியம் கொடுத்தனர். அந்த தைரியத்தில் மயிலை என் கையில் பிடித்தபடி நடித்தேன். தனுஷுடன் சில படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை, தவிர்த்தது ஏன் என கேட்கிறார்கள். ‘பொல்லாதவன்‘ படத்திலேயே நடிக்க இருந்தேன். அதற்கான போட்டோ ஷூட்டும் நடந்தது. அதேநேரம் தெலுங்கில் ‘சந்தமாமா‘ படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட்டை பொறுத்து எதில் நடிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் ‘சந்தமாமா‘ படத்தை தேர்வு செய்தேன். அதன்பிறகும் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதற்கான சூழல் அமையவில்லை. ‘மாரி‘ படத்தில் அவருடன் இணைந்து நடிப்பது சந்தோஷம்.இவ்வாறு காஜல் அகர் வால் கூறினார்.
0 comments:
Post a Comment