பாலிவுட்டில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா கெமிஸ்ட்ரியை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் ஒருகாலத்தில் இருந்தது. இருவரும் இணைந்து நடித்த மூன்று படங்களும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. இதில் மணிரத்னம் இயக்கிய 'தில் சே' திரைப்படம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டது. இந்த படம் தமிழில் 'உயிரே' என்ற பெயரிலும் வெளிவந்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கானும், மனிஷா கொய்ராலும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். பத்மவிருது பெற்ற பாலிவுட் பிரமுகர் சஞ்சய் லீலா பஞ்சாலிக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில்தான் இருவரும் சந்தித்து கொண்டனர்.
இதுகுறித்து மனிஷா கொய்ராலா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் கூறும்போது, 'ஷாருக்கனுடன் ஏற்பட்ட சந்திப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாகவும், அவருடைய கவர்ச்சி ஈடு இணையற்றது என்றும் கூறினார்.
மனீஷா கொய்ராலா சமீபத்தில்தான் புற்றுநோயிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் பம்பாய், முதல்வன், பாபா, ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
0 comments:
Post a Comment