அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 247 ஓட்டங்கள் என்று திணறி கொண்டிருந்த போது மிட்செல் ஜான்சன் களமிறங்கினார். அப்போது அவர் மீது இந்திய வீரர்கள் சிலர் வாய்வார்த்தைகளை தொடுத்தனர்.
குறிப்பாக ரோஹித் சர்மா கொஞ்சம் அதிகமாகவே வாய்வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இது இந்திய அணிக்கு எதிராகத் திரும்பியது. இதன் காரணமாக மிட்செல் ஜான்சன் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி அவுஸ்திரேலிய வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இது குறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில், நான் களமிறங்கியவுடன் இந்திய வீரர்கள் செய்த செய்கை எனக்கு கவனத்தை கூட்டியதோடு, அவர்களும் எங்கள் வலையில் வீழ்ந்தனர்.
எங்களைப் பொறுத்தவரை அது ஆட்டத்தின் ஒரு பகுதி, ஆனால் அது அவர்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்து விட்டது. இந்திய அணியினர் கொஞ்சம் கூடுதலாகச் சென்று விட்டனர்.
இந்திய வீரர்களின் இந்த நடத்தை ஆட்டத்தை விட்டு மனதை கொஞ்சம் விலக்கி வைக்கச் செய்தது. இது ஒரு நல்ல விடயம் ஏனெனில் நான் ஓட்டப்பலகையை பார்ப்பதை அது தவிர்க்கச் செய்தது.
ரோஹித் சர்மா குறிப்பாக கொஞ்சம் அதிகமாக வாய்வார்த்தைகளில் ஈடுபட்டார். தொடக்கத்தில் அவருக்கு பதில் கூறிக்கொண்டிருந்தேன் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து சிரிக்க தொடங்கினேன்.
மேலும் நான் துடுப்பெடுத்தாடும் போது ஸ்லெட்ஜிங்கை விரும்புவேன் என்றும், ஆனால் பந்து வீசும் போது அது போன்ற வாய்வார்த்தைகள் என்னை சற்று பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment