இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆடுகளத்தில் சந்தித்த சில மறக்க நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் துடுப்பெடுத்தாடினார். அப்போது விந்தி விந்தி ஓட்டங்கள் ஓடிய வாட்சனை போல் தவானும் விந்தி விந்தி ஓடிக் காட்டி அவரை கேலி செய்தார்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தாலும், காயமடைந்த வீரரை கேலி செய்தது அநாகரீகமாக கருதப்பட்டது.
புதிய மைல்கல்லை எட்டிய தவான்
சமீபத்தில் ஐதராபாத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் சதத்தை நழுவ விட்ட ஷிகர் தவான், அந்தப் போட்டியில் 2 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
சங்கக்காரா இடத்தை தட்டிப் பறித்த தவான்
கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியதையடுத்து அவருக்கு தலைவர் பதவி பரிசாக கிடைத்தது. இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, கேமரூன் ஒயிட் ஆகியோர் அந்த அணியின் தலைவர்களாக இருந்தனர்.
தந்தையானார் தவான்
மும்பையில் உள்ள தனியார் மருத்துமனையில் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
2012ல் ஷிகர் தவானை இரண்டாவதாக மணந்த ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ரியா, ஆலியா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரட்டை சதம் விளாசிய தவான்
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவானின் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
86 பந்துகளில் சதத்தைத் தொட்ட ஷிகர் தவான், அடுத்த 46 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இவர் 150 பந்துகளில் 30 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 248 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
0 comments:
Post a Comment