↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினியை அபூர்வ ராகங்களில் அறிமுகப்படுத்தியவர் கே பாலச்சந்தர் என்பதும், அந்த அறிமுகம் நிகழ்ந்த விதமும் தமிழ் சினிமா ரசிகர்கள், வாசகர்களுக்கு பால பாடம். 

ரஜினியை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும், ரஜினி சூப்பர் ஸ்டாரான பிறகு அவரை வைத்து அதிக படங்கள் இயக்கவில்லை கேபி. தில்லு முல்லு படத்துக்குப் பிறகு ரஜினியை அவர் இயக்கவே இல்லை. 

அவ்வப்போது தனது படங்களில் கெஸ்ட் ரோலில் தோன்ற வைத்ததோடு சரி. அதே நேரம் தனது பேனரில் அவரை வைத்து பெரிய படங்களைத் தயாரித்தார். அத்தனையும் நல்ல வெற்றிப் படங்கள். ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய சில படங்கள்..

அபூர்வ ராகங்கள்


 இதில் கமல்ஹாஸன் நாயகன். ஸ்ரீவித்யா நாயகி. ரஜினிக்கு சின்ன வேடம்தான். ஆனால் இந்த நபர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாரே என திரும்பிப் பார்க்க வைத்த வேடம் அது.

மூன்று முடிச்சு 


ரஜினியை பிரதானமாக வைத்து கே பாலச்சந்தர் எடுத்த இரண்டாவது படம் மூன்று முடிச்சு. வில்லத்தனம் கலந்த ஹீரோவாக ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் கே பாலச்சந்தர்.

அந்துலேனி கதா 


தமிழில் தான் இயக்கிய அவள் ஒரு தொடர் கதையை தெலுங்கில் அந்துலேனி கதா என எடுத்தார் கேபி. தமிழில் ஜெய்கணேன் செய்த குடிகார அண்ணன் வேடத்தை தெலுங்கில் ரஜினியைச் செய்ய வைத்தார் பாலச்சந்தர்.

அவர்கள்


 தமிழில் வந்த முற்போக்குப் படங்களில் இந்த அவர்களையும் சேர்க்கலாம். ரஜினிக்கு சாடிஸ்ட் கணவன் வேடம். மிக அற்புதமாக நடித்திருப்பார்.

தப்புத் தாளங்கள்


 ரஜினி ஒரு தாதாவாக நடித்திருந்த படம். தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று. இதே படம் பின்னர் கன்னடத்தில் தப்பித தாளா என வெளியானது. இதிலும் ரஜினிதான் ஹீரோ.

நினைத்தாலே இனிக்கும் 


ரஜினியும் கமலும் இணைந்து நடித்த கடைசி படம். இந்தப் படம் ஒரு இன்னிசைக் காவியம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. கமல் ஹீரோவாக இருந்தாலும், தனது ஸ்டைல், மேனரிசங்களால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார் ரஜினி. அவர் பாத்திரத்தை அப்படிப் படைத்தார் கேபி. தெலுங்கில் இந்தப் படம் அந்தமைனா அனுபவம் என்ற பெயரில் வெளியானது. அதிலும் ரஜினிக்கு அதே வேடம் தந்தார் கேபி.

தில்லு முல்லு


ரஜினியை நாயகனாக வைத்து கே பாலச்சந்தர் இயக்கிய கடைசி படம் இது. அதுவரை வில்லன், நாயகன் என்று பார்த்த ரஜினியை, மிகச் சிறந்த நகைச்சுவை வேடத்தில் ஜொலிக்க வைத்தார் கேபி. அதன் பிறகு அக்னி சாட்சி, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் தோன்ற வைத்திருந்தார்.

தயாரிப்பாளராக...


 ரஜினியை வைத்து தனது கவிதாலயா பேனரில், நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, அண்ணாமலை, முத்து போன்ற படங்களைத் தயாரித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top