ரஜினி, விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான அரசியல் பிரமுகர்களும் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு கே.பாலச்சந்தரின் இறுதி ஊர்வலம் இன்று 3 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கிளம்பியது.
குடும்ப மரபுப்படி இறுதிச்சடங்கு நடந்து முடிந்தபின் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு வழியாக பெசன்ட்நகர் சென்றடைந்தது. அங்குள்ள மின் மயானத்தில் கே.பாலச்சந்தரின் உடல் மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பாலச்சந்தருக்கு கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்.
இயக்குனர் சிகரத்தின் ஆத்மா சாந்தியடைய வியப்பு.கொம் சார்ப்பாக நாமும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.