ஒரு படமொன்று தொடங்கின நாளிலிருந்து ரிலீசாகி விமர்சனங்கள் வந்து ஓடி முடியும்வரை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் படும்பாடு கத்திமேல் நடப்பதாகும். லட்சக்கணக்கில் முதலும் துறையா இது? எத்தனை கோடிகள் முதலீட்டில்? கரணம் தப்பினா தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் தூக்கில் தொங்கவேண்டியதுதான். ஆனா, ரசிகர்களுக்கு இதெல்லாம் எங்கு தெரியப்போகிறது?
தங்களின் விருப்பு நாயகனின் போட்டி நடிகனின் படம் ஒன்று வரப்போகுதென்றால், அதன் சூட்டிங்க் ஆரம்பித்த நாளிலிருந்து அதுபற்றிய எதிர்மறையான கருத்துக்களை வெளியிடத்தொடங்கிடுவார்கள். இந்த நிலை படம் ரிலீசாகி ஒருவேளை நல்லதா அமைந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடுவார்கள். படம் ரெம்பவே நல்லா வந்திருந்தா இப்பிடியான விஷமத்தனமான விமர்சனங்களின் பாதிப்பு மிக குறைவு..ஆனா சுமாரா,மொக்கையா வரும் படங்கள் இதுபோன்ற விமர்சனங்களால் பலத்த அடிவாங்கும். இவ்வாறான செயல்களை அதிகம் செய்வோர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களே!
இன்று யாரை பார்த்தாலும் பேஸ்புக், டுவீட்டர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். ஆகவே அதனூடான இவ்வாறான செயல்கள் பல பேரை சென்றடையும். தமிழ்சினிமாவின் அழிவுக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பார்ப்போம் வரும்காலத்தில் இதன் தாக்கங்கள் எவ்வாறு அமையப்பொகுதெண்டு.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment