தமிழ்த்திரையுலகின் மிகப் பிரம்மாண்டத் தயாரிப்பாக உருவாகியுள்ள ஐ திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என்று
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டநிலையில் ஐ படத்தின் வரவால், தமிழில் பொங்கல் தினத்தில் வெளியாகும் வேறு படங்கள் பாதிப்புக்குள்ளாகுமா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் என்று ஒருசாரார் கருதுகிறார்கள். தீபாவளி போல் கத்தி, பூஜை என இரண்டு படங்கள் மட்டும் வந்தால் பிரச்சனை அதிகம் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.ஆனால், பொங்கலுக்கு ஐ படத்துடன், என்னைஅறிந்தால், ஆம்பள ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.என்னைஅறிந்தால் படத்தின் வெளியீட்டைப் பற்றி ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர்.ஆம்பள படம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பொங்கலுக்கு ஐ, என்னைஅறிந்தால் ஆகிய படங்கள் வெளிவந்தாலே இருக்கும் அனைத்துத் திரையரங்குகளும் அவற்றிற்கே சரியாகப் போய்விடும். மூன்றாவதாக, வேறு எந்தப் படத்திற்கும், நல்ல திரையரங்குகளை அமைப்பது கடினம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஐ படம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. என்னைஅறிந்தால் படமும் அதற்குக் குறையாமல் வெளிவரும். அஜித் படங்களுக்கென்று எப்போதுமே நல்ல ஓபனிங் இருக்கும்.அதிலும், இந்தப்படத்தில், அவர் முதன்முறையாக கௌதம்மேனனுடன் இணைந்திருப்பதாலும், ஒரு வருடம் கழித்து, அவர் படம் வருவதாலும், அந்தப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
எனவே, தமிழில் பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு எந்தப்படம் வெளிவந்தாலும், தியேட்டர்கள் கிடைப்பது கடினம் என்கிறார்கள். இதே நிலைமைதான், தெலுங்கிலும் உள்ளதாம்.அங்கும் ஜுனியர் என்டிஆர், வெங்கடேஷ் - பவன்கல்யாண் நடிக்கும் படங்கள் பொங்கலுக்கு வெளிவர உள்ளன. தற்போது ஐ படமும், பொங்கலுக்குப் போட்டி போடுவதால், மற்ற சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்கிறார்கள்.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.......................................................................................................
0 comments:
Post a Comment