உலகின் மிக பயங்கர நோய் எய்ட்ஸோ, எபோலாவோ இல்லை, நம்முள் இருக்கும் தீய, வன்முறை எண்ணங்கள் தான். இதை ஒழித்தாலே உலகம் அமைதியாகிவிடும். வன்முறை, தீவிரவாதம் என்பது எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வாகாது. அந்த வகையில் அன்பின் வலியை நம்முள் புதைய வைத்த தமிழ் சினிமாவில் சில படங்கள் இதோ உங்களுக்காக..
அன்பே சிவம்
கடவுள் என்பது கோவிலில் இல்லை, பிறருக்கு கஷ்டம் வரும் போது, அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் நீயும் கடவுளே என்ற ஆழமான கருத்தை அழுத்தமாக சொல்லிய படம் தான் அன்பே சிவம். ஆனால், படத்தின் மீது யாரும் அன்பு காட்டவில்லை போல, கமலின் நல்ல படங்களில் தோல்வியடைந்த படம் இது.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
கமல் எப்போதும் தன் அனைத்து படங்களிலும் அன்பில் வலிமையை கூறிக்கொண்டே இருப்பார். அவரின் படங்களை பற்றி பேசினாலே போதும். இந்த தொகுப்பு முடிவடைந்து விடும். அந்த வரிசையில் நோயாளிகளை வெறும் ஒரு உடலாக பார்க்காமல், மனிதராக பாருங்கள் என்ற நாட்டிற்கு மிகவும் அவசியமான கருத்தை கலகலப்பாக கூறியிருந்தது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.
ஹேராம்
மீண்டும் மீண்டும் கமல் தான். நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைக்கும் எதிர்த்து அடித்தால் தான் பதில் கிடைக்கும் என்று அஹிம்சையே உருவான காந்தியை கொல்ல வரும் கமல், பின் அவரின் கொள்கையை அறிந்து அன்பு தான் சிறந்தது என அந்த திட்டத்தை கைவிடுவார்.
ரோஜா
மணிரத்னம் அவர்களும் என்றும் தன் படத்தில் வன்முறை காட்சிகளை கூட மிக அமைதியாக தான் காட்டுவார். அந்த வகையில் மதக்கலவரத்தை மையமாக கொண்டு வெளிவந்த ரோஜா, இந்திய சினிமாவின் எவர்கிரீன் சென்சேஷ்னல் படம். இப்படத்தின் கிளைமேக்ஸில் அரவிந்த்சாமி பேசும் ஒவ்வொரு வசனமும் வன்முறைக்கு எதிரான நச் டையலாக்ஸ். இதை தொடர்ந்து வெளிவந்த பம்பாய் படமும் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஒழிப்பது குறித்து மிகவும் ஆழமாக பேசியது.
ஆயுதம் செய்வோம்
சுந்தர்.சி நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கங்கனம் கட்டிய காலத்தில் வந்த படம். படத்தின் டைட்டிலை பார்த்த பலர் என்ன ஆயுதம் செய்வோம் என்று வைத்து காந்தி படத்தை வைத்திருக்கிறார்கள் என்று குழம்பினர். பிறகு தான் ‘ஆயுதம் செய்வோம் அன்பிற்காக’ என்று குறிப்பிட்டுள்ளனர் என தெரிந்தது. ஒரு ரவுடி எப்படி அன்பின் வலிமையை புரிந்து கொள்கிறான், அன்பு மற்றும் அஹிம்சையால் எதையும் ஜெயிக்கலாம் என்று கூறிய படம். ஆனால், படம் தான் ஜெயிக்க வில்லை.
இதுபோல் இன்னும் எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலகளவில் வெளியாகியுள்ளது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.........................................................................................................
0 comments:
Post a Comment