சினிமாவில் இது ஆவிகளின் யுகம் என்றாலும், பேய்களைக் கொஞ்சம் மறந்திருந்த தமிழ்சினிமாவில் ஆவியைப் புகுத்தியவர்கள் என்ற பெருமை(!)யைப் பெறுபவர்கள் இரட்டை இயக்குநர்களான ஹரி & ஹரீஷ்.
‘ஓர் இரவு’ படம் மூலம் ஆவிகள் உண்டு என்று அடித்துச் சொல்லி ரசிகர்களை பயமுறுத்திய இந்த இரட்டையர் மீண்டும் பேய்களை அறியும் முயற்சியாக ‘ஆ’ படத்தை இயக்கியிருக்கிறார்கள். பேய்க் கதைகளில் இது கொஞ்சம் வித்தியாசமானதாம்.
“பேயில் என்னய்யா வித்தியாசம்..?” என்கிறீர்களா..?
“இருக்கிறது. இதுவரை திரையில் ஒரு பேய்க் கதை மட்டுமே சொல்லப்பட்டதைத் தாண்டி ஒரு படத்துக்குள் பல கதைகளைச் சொல்லப்போகிறோம். குறும்படங்களுக்கான காலம் இது என்பதால் இதைச் சின்னச் சின்னக் கதைகளால் ஒரு ஹாரர் ஆன்தாலஜியாகச் சொல்கிறோம்…” என்கிறார் ஹரீஷ்.
தொடரும் ஹரி, “இது சினிமா இலக்கணம் தாண்டிய கதை. இதற்காகவே தமிழ் சினிமா வெளிச்சம் படாத ஜப்பான், அரேபியப் பாலைவனத்தைக் களங்களாக வைத்திருக்கிறோம். கடலுக்குள்ளேயே நடக்கும் காட்சி மற்றும் ‘ஏடிஎம்’முக்குள்ளேயே நடக்கும் காட்சி எல்லாம் இதுவரை படங்களில் காணாத த்ரில்லைத் தரும்..!” என்கிறார்.
இவர்களது முந்தைய படமான ‘அம்புலி 3டி’யைத் தயாரித்த ‘கேடிவிஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ்’ வி.லோகநாதனே இந்தப் படத்தையும் தயாரிப்பதால் இவர்களது ‘டீம் ஒர்க்’கின் நம்பகத் தன்மை புரிகிறது.
‘அம்புலி’ கோகுல்நாத் ஹீரோவாக, சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் ஜப்பானிய நடிக, நடிகையரும் நடித்திருக்கிறார்கள்.
வரும் வெள்ளியன்று (28-11-14) வெளியாகி பயமுறுத்தவிருக்கிறது ‘ஆ….!’
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.......................................................................................................
0 comments:
Post a Comment