இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26ம்தேதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வருவதாக மோடியிடம் ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12ம்தேதியே இந்தியா வருகிறாராமே. ஏன் அப்படி தனது முடிவை மாற்றிக் கொண்டார்? இதுபற்றிய விவரம் தெரிய வேண்டுமானால் மேற்கொண்டு படியுங்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நமது குடியரசு தின நாளில் இந்தியா வருவதாக ஒப்புக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு போன் செய்து, உங்கள் நாட்டில் நிலவரம் சரியான பிறகு அங்கும் வருகிறேன் என்று சமாதானம் செய்ததும் தெரிந்ததே.
ஆனால் ஒரே நாளில் ஒபாமா நிலைப்பாட்டில் திடீரென பெரும் மாற்றம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 26ம்தேதியன்று இந்தியா வருவதற்கு பதிலாக டிசம்பர் 12ம்தேதியே வர திட்டமிட்டுள்ளாராம். இப்படி நாங்கள் சொல்லவில்லை, சமூக வலைத்தள டிவிட் ஒன்று தெரிவிக்கிறது. ஏன் டிசம்பர் 12ம்தேதியை தேர்ந்தெடுத்தார், அந்த தேதிக்கான அப்படியொரு மகத்துவம் என்ன, ஒரு ஜனநாயக நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தினத்தை விட புனிதமான தினமா டிசம்பர் 12ம்தேதி என்பது என்பது போன்ற கேள்விகள் மண்டையை பிய்ப்பது சகஜமே.
ஆம்... மிக, மிக, மிக முக்கியமான நாள் டிசம்பர் 12ம்தேதி என்கிறது அந்த டிவிட். ஏனெனில் அன்றுதான் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் பிறந்த நாள். அதுமட்டுமா, கோடான கோடி ரசிகர்கள் சோறு, தண்ணி இல்லாமல் (ஏன்.. உடம்பு சரியில்லையா என கேட்கப்படாது) காத்திருக்கும், லிங்கா திரைப்படம் வெளியாகும் நாளும் அன்றுதான். டிசம்பர் 12ம்தேதி ஒபாமா வருவதே, லிங்கா படத்தை கண்டு களித்து, ரஜினிகாந்த் படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தானாம். ரஜினியை வைத்து இணையத்தில் உலவும் காமெடிகளில் இது ஒரு ரகம். அவ்வளவே..
.............................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment