உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது.
பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க குறைந்தது 50 டொலர்களாவது மாத வாடகையாக செலுத்த வேண்டும்.
ஆனால், இதை செலுத்தமுடியாத சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் பெய்ஜிங்க் நகர பூமிக்கு அடியில் உள்ள 20 ஆயிரம் பதுங்கு குழிகளில் வசித்து வருகின்றனர்.
1969ஆம் ஆண்டு பெய்ஜிங்க் நகரத்தின் தலைவராக மாவோ(Mao) இருந்த சமயத்தில் சோவியத் நாடுகள் சீனா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, தாக்குதலிலிருந்து தப்பிக்க 20 ஆயிரம் பதுங்கு குழிகளை அமைத்தார்.
ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்து விட, பெய்ஜிங்க் நகருக்கு Deng Xiaoping என்பவர் தலைவரானார். இதனை தொடர்ந்து தாக்குதல் எதுவும் நிகழாததால் பதுங்கு குழிகளை வேலை இல்லாத, வறுமையில் வாடிய மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.
1990ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, பதுங்கு குழிகளில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்த நகராட்சி, அவற்றை அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிக குறைந்த வாடகைக்கு பயன்படுத்த அனுமதித்தது.
இதனை தொடர்ந்து சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகையை கட்ட முடியாமல் தவிப்பவர்கள் என சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் இந்த பதுங்கு குழிகளை தங்களின் கனவு வீடுகளாக மாற்றி தங்கியுள்ளனர்.
மேலும் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் இந்த பதுங்கு குழிகளில் குடியிருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment