தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் அறியப்படும் மார்க்ஸ், பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது.
இந்நிலையில், 21 வயது நிறைந்த ஜெனியுடன் காரல் மார்க்சுக்கு காதல் மலர்ந்தபோது மார்க்சுக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஒருமுறை அவர் தனது அன்பு மனைவி ஜெனிக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர், எத்தனையோ பெண்கள் உலகில் இருக்கிறார்கள். அதில் சிலர் அழகிகளாக இருக்கிறார்கள்.
ஆனால், ஒரு பெண்ணின் ஒவ்வொரு பண்பும், ஏன் சுருக்கங்கள் கூட என்னுடைய வாழ்க்கையின் உன்னதமான, இனிமையான நினைவுகளை தருகிற முகத்தை நான் வேறெங்கே கண்டுபிடிப்பேன்?
என்னுடைய முடிவில்லாத துயரங்கள்,என்னுடைய ஈடுசெய்ய முடியா இழப்புகள் எல்லாவற்றையும் உன்னுடைய முகக்களையில் படித்து விடுகிறேன்.
உன்னுடைய இனிமை மிகுந்த முகத்தை முத்தமிடுகிற பொழுது என்னுடைய துயரங்களையும் முத்தமிட்டு வெகுதூரத்துக்கு அனுப்பிவிடுகிறேன்.
உன்னுடைய கரங்களில் புதைந்து உன் முத்தங்களால் புத்துயிர் பெறுகிறேன் நான்.
என் பிரியத்துக்குரியவளே பிரியா விடை தருகிறேன். உனக்கும், நம் பிள்ளைகளுக்கும் ஆயிரம் முத்தங்கள்! என்று எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment