ஆனால் முகத்தில் கரும்புள்ளிகளும் கருந்திட்டுகளும் வந்துவிட்டால் சோகத்தில் ஆழ்ந்துவிடுவர்.
ஏன் ஆத்திரத்தில் சில பெண்கள் தங்களது நகங்களால் கரும்புள்ளிகளை கிள்ளிவிடுவர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு.
ஏனெனில் அது கரும்புள்ளிகளை இன்னும் அதிகரிக்கவே வழிவகுக்கும். எனவே இப்பிரச்சனையை கையாள சிறந்தது தக்காளி பேஷியல்.
தக்காளி பேஷியல்
உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன்,
தக்காளி விழுது - அரை டீஸ்பூன்
இந்த இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
முகத்திலுள்ள செல்கள் இறந்து பொலிவிழந்து காணப்படும் முகத்திற்கு இந்த பேஷியலை போட்டால் முகம் கண்ணாடியை போல் பளிச்சென இருக்கும்.
ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள்.
இதை தொடர்ந்து செய்து வந்தால், முகம் சூரியனை போல் பிரகாசிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
0 comments:
Post a Comment