தமிழ் சினிமாவில் ஐ படத்திற்கு தான் தற்போது பெரிய எதிர்ப்பார்ப்பு. ஆனால், இது நாள் வரை ஐ என்றால் அழகு, நச்சு, அரசன் என்று 100 அர்த்தம் கூறி விட்டனர்.
இதற்கு தனது பேஸ்புக் பக்கத்தில் எழுத்தாளர் சுபா அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘‘ஐ’ என்ற தலைப்பு எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? கதையில் கூனன் ஒரு முக்கியப் பாத்திரம். தலைப்பில் கூன் போட்டு வளைந்த எழுத்துகள் இடம்பெற்றால் நன்றாயிருக்கும் என்று ஷங்கர் விரும்பினார்.
ஐ, ஜ போன்ற எழுத்துகள் அவருடைய ஸ்க்ரீன் டெஸ்ட்டில் வெற்றிபெற்றன. பல்கலைக்கழக தமிழ் அகராதியில் ‘ஐ’யில் துவங்கும் வார்த்தைகளைத் தேடலாம் என்று பார்த்தால் மாபெரும் இன்ப அதிர்ச்சி. ‘ஐ’ என்ற ஒற்றை எழுத்தே கதைக்கு மிகப் பொருத்தமான பல அர்த்தங்களைத் தந்தது. (முக்கியமாக அழகு!)
உடனே போடு டைரக்டருக்கு ஃபோன். அவருக்கும் ஆச்சரியம். இன்னொரு அகராதியிலும் அர்த்தங்களை சரிபார்த்து, உடனே தலைப்பைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். ‘ஐ’ பிறந்தது. தை பிறக்கும் முன்பே திரை பார்க்கக்கூடும்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment