↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன.
இதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும்
இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது.
ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
மருந்துகளோடு சேர்ந்து கொள்ளும்
அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.
கடுமையான வாந்திக்கு வழிவகுக்கும்
பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.
பற்களில் மோசமான பாதிப்பு
அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
பல் புழைகள் மற்றும் பல் ஈறு அழற்சி பிரச்சனைகளை கொண்டவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
அலர்ஜிகள்
அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.
கருச்சிதைவு ஏற்படும்
கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.
கீல்வாதம் மற்றும் முடக்குவாத இடர்பாடு
முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும் போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.
ஊறும் உணர்வு
அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top