1. ஹூண்டாய் எலைட் ஐ20
சிறியரக கார் சந்தையில் நுழைந்த எலைட் ஐ20 கார் இந்தியளவில் அதிகப்படியான வரவேற்பினை பெற்ற காராகும். 2015ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதினை பெற்றுள்ளது.
2. டாடா ஸெஸ்ட்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்க்கு மீண்டும் சிறப்பான பாதையை அமைத்து கொடுத்துள்ளது ஸெஸ்ட் கார் மேலும் இந்தியாவின் முதல் ஆட்டோமெட்டிக் மெனுவல் டீசல் செடான் என்ற பெருமையை பெற்றுள்ளது.
3. மஹிந்திரா ஸ்கார்பியோ
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ இந்தியளவில் எதிர்பார்க்கப்பட்ட மிக விருப்பமான எஸ்யூவி காராகும். புதிய தோற்றத்தில் தனது முத்திரையை மேலும் வலுவாக்கியுள்ளது.
4. ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் மாடல் மட்டுமே இருந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட டீசல் மாடல் சி ரக செடான் சந்தையில் ஹோண்டாவை முதலிடத்திற்க்கு உயர்த்தியுள்ளது.
5. மாருதி சியாஸ்
மாருதி சிறியரக சந்தையில் மிகவும் வலுவான நிலையில் இருந்தபொழுதும் சி ரக செடான் பிரிவில் வலுவற்றே இருந்தது. எஸ்எக்ஸ4 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட சியாஸ் வலுவான அடிதளத்தினை அமைத்துள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு மாற்றாக உள்ளது.
6. ஹோண்டா மொபிலியோ
ஹோண்டா கார் பிரிவு மிகவும் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட மொபிலியோ எம்பிவி சந்தையில் எர்டிகாவிற்க்கு சரியான மாற்றாக மொபிலியோ விளங்குகின்றது.
7. ஹூண்டாய் எக்ஸென்ட்
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் காம்பெக்ட் செடான் காரான எக்ஸ்சென்ட் மிக பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. பெட்ரோல் மாடல் தானியங்கி பரப்புகை பெற்றுள்ளது.
8. கரோல்லா அலட்டிஸ்
டொயோட்டா நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற கரோல்லா மிக நேர்த்தியான வடிவமைப்பில் விற்பனைக்கு வந்தது.
9. ஆடி ஏ3
ஆடி ஏ3 சொகுசு செடான் கார் இந்தியளவில் மிகவும் பேசப்பட்ட சொகுசு காராக விளங்குகின்றது. மிகவும் சிறப்பான விலையில் அமைந்த ஆடி ஏ3 இந்தியாவில் அதிகம் விரும்பபட்ட சொகுசு காராக வலம் வருகின்றது.
10. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ்
பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ் காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்குகின்றது...
0 comments:
Post a Comment