தமிழ் சினிமாவின் கரீனா கபூர் என்றால் தமன்னா தான். இவரின் தோற்றம் மார்புள் சிலை போல் இருக்க, எளிதாக தமிழ் சினிமா ரசிகர்களின் மார்பில் சிலையாகிவிட்டார் என்பதே உண்மை. இவர் சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியாவின் மகள். 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார்.
தன் இளம் வயதில் அதுவும் 16 வயதில் பாலிவுட் படமான சாந்த் சே ரோசன் செகரா என்ற படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜோதி கிருஷ்ணா இயக்கிய கேடி படத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் மிரட்டியிருப்பார்.
இதன் பிறகு பெரிதாக ஜொலிக்காத இவருக்கு கல்லூரி படம் தான் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து படிக்காதவன், அயன், கண்டேன் காதலை போன்று இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக பையா படம் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேறபை பெற்று தந்தது.
தமிழ் சினிமாவின் தற்போதை மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா தான் இவர்கள் மூவருடன் நடித்த பெருமை இவரை சாரும். இது மட்டுமில்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், பவன் கல்யான் என அனைவருடனும் ஜோடி போட்டு அசத்தினார்.
தற்போது இவரது புகழ் தன் ஆரம்பித்த பாலிவுட்டிலேயே மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், சைப் அலிகான் என முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரின் வெற்றி பயணம் இன்னும் பல வருடங்கள் நீடிக்க இவரது பிறந்த நாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
0 comments:
Post a Comment