2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை விளையாடியது. இந்தியாவின் கை நன்றாக ஓங்கிய அதே வேகத்தில் 2வது இன்னிங்ஸில் மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதன் காரணமாக 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அடித்து நொறுக்கி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தோல்விக்கான காரணங்களை இந்திய அணித்தலைவர் டோனி வரிசையாக அடுக்கியுள்ளார்.
1) மோசமான பயிற்சி ஆடுகளம் காரணமாக தவான் காயமடைந்தது.
2) 4வது நாள் ஆட்டத் தொடக்கத்திற்கு முன்பாக தவானுக்கு ஏற்பட்ட காயம்.
3) ஷிகர் தவான் காயமடைந்தது தொடர்பாக உடை மாற்றும் அறையில் ஏற்பட்ட குழப்பம்.
4) 4வது நாள் ஆட்டத்தின்போது 2வது இன்னிங்ஸின் போது சரியான பார்ட்னர்ஷிப் ஏற்படாமல் போனது.
5) 4வது நாள் ஆட்டத்தின்போது முதல் பாதி ஆட்டத்தில் நாம் பிரகாசிக்காமல் போனது.
6) 5வது நாள் ஆட்டம் வரை போட்டி நீடிக்காமல் போக விட்டது.
7) 5வது நாள் ஆட்டம் வரை போயிருந்தால் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு நாம் ஏதாவது செய்திருக்கலாம்.
8) மிட்சல் ஜான்சன் 88 ஓட்டங்களை குவித்தது. இந்தியாவின் 2வது இன்னிங்ஸின்போது அவர் முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது.
9) ஜான்சன் அடித்த பல பந்துகள் கேட்ச் ஆகும் நிலை இருந்தபோதும் ஷார்ட்டாக வந்து விழுந்ததால் பிடிக்க முடியாமல் போனது.
10) நடுவர்களின் தீர்ப்பும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment