'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூலில் உள்ள 942 செய்யுட்களில், ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.
சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.
இவர் இவ்வாறு ஆரூடம் சொன்னதால், அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி உயிரோடு எரித்துவிடுவார்கள் என்பதால் பல எதிர்கால நிகழ்வுகளை கணிப்புக்களை அவர் சங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.
பிற்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தி அவருக்கு எப்படி ஏற்பட்டது என்று அவர் ஏதும் குறிப்பு எழுதிவைக்கவில்லை.
பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும், அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும், ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியுறுவதுவரை ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி வைத்திருந்ததும் விந்தையானதாகும்.
அமெரிக்காவின் விடுதலைப்போரைப் பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயங்கள்.
ஏனெனில் அந்த நாடு, நாஸ்டர்டாமஸ் காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது வியக்கத்தக்க உண்மை!
0 comments:
Post a Comment