இந்தியா - அவுஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது.
2வது டெஸ்ட் போட்டியில் டோனி தலையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கோஹ்லி 1 ஓட்டங்களில் நடையை கட்ட, டோனி, ரோஹித் டக்- அவுட் ஆகினர். கடைசியில் களமிறங்கிய தவான் (81) மற்றும் உமேஷ் யாதவின் (30) உதவியுடன் இந்தியா 127 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 128 ஓட்டங்கள் என்ற எளிமையான இலக்கோடு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஓட்டங்கள் சேர்க்கும் முயற்சியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றியும் பெறலாம் என ரசிகர்கள் நம்பிக்கை பெறும் வகையில் ஆட்டம் இருந்தது.
முடிவில் அவுஸ்திரேலியா, போட்டி முடிய 1 நாளும், இன்றைய நாள் முடிய 22.5 ஓவர்களும் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளுக்கு 130 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, ஓய்வு அறையில் அணி வீரர்கள் இடையே இருந்த கருத்து பரிமாற்றம் இல்லாமல் போனதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment