பெங்களூரில் திருமணத்தன்று மணமகன் வராததால், பெண் பொறியாளர் திருமணம் நின்று போனது. |
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருபவர் அனு (26). ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் இவரது சொந்த ஊராகும். அதேபோல அந்த நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருபவர் முரளி கிருஷ்ணன். இவர் சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர். இந்த நிலையில் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்ததால் அனுவுக்கும், முரளி கிருஷ்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துவிடவே, பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் உள்ள திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழ்களை அனுவின் வீட்டார் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்திருந்தனர். திருமண நாள் அன்று மண்டபத்தில் அனுவின் வீட்டார் ஏராளமானோர் வந்திருந்தனர். அதன்படி மணமகன் வருகைக்காக மண்டபத்தில் அனைவரும் காத்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல மணமகன் முரளி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அவரிடம் அனு கைப்பேசியில் விசாரித்துள்ளார். நண்பர் ஒருவருடன் வந்து கொண்டிருப்பதாகவும் முகூர்த்த நேரத்திற்குள் வந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் முகூர்த்த நேரம் முடிந்த பின்பும் முரளி கிருஷ்ணன் வராததால் அவரின் கைப்பேசிக்கு அனு மீண்டும் தொடர்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் மண்டபத்தில் பதற்றம் அதிகரித்தது. அனுவின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். இதனையடுத்து தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, திருமண நாள் அன்று வராமல் ஏமாற்றிய முரளி கிருஷ்ணன் மீது மணக்கோலத்திலேயே ஜே.பி.நகர் காவல் நிலையம் சென்று புகார் அனு கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து சென்னையை சேர்ந்த முரளி கிருஷ்ணனை தேடி வருகின்றனர். |
காதலிக்க நேரமிருந்து…கல்யாணத்துக்கு வரவில்லை: மணக்கோலத்தில் பரிதவித்த மணமகள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment