இரு உதடுகளுடன் வாய் முடிந்து விடாமல் கன்னம், நாக்கு, பற்கள் என அனைத்தும் அடங்கும். வாய் புற்றுநோய் வந்து விட்டால் வாயின் அனைத்து இடங்களுக்கும் எளிதாக பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
பல காரணங்களால் வாய் புற்றுநோய் வருகிறது. அவற்றை தவிர்க்கும் போது எளிதாக இந்த நோயில் இருந்து தப்பி விடலாம்.
சூரிய ஒளி
ஒருவருடைய உடலில் சூரிய ஒளி அதிகம்படுவதால் அவருக்கு தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அது மேலும் வளர்ந்து, வாய் புற்றாகவும் மாறக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, சூரிய ஒளி உடலில் படுவதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
தினமும் நன்றாக உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வதன் மூலமும் புற்றுநோய் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகமாகும்.
புகையிலை
வாய் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணம் புகையிலை உபயோகிப்பது தான். சிகரெட், பீடி மூலம் புகைப்பதால் மட்டுமல்ல, புகையிலையை நேரடியாக மென்று தின்றாலும் இந்த நோய் தாக்கும். எனவே இந்தப் புகையிலையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால்
ஒருவர் வாய் புற்றுநோயிலிருந்து தப்பிக்க, குடிப்பழக்கத்திலிருந்தும் அவர் மீண்டு வர வேண்டும். மது அவருடைய வாயைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் தன்மை கொண்டது.
வாய் அசுத்தம்
வாய்க்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் வாய் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் பற்களை நன்றாக பிரஷ் செய்து, நாக்குகளையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய உணவு
புற்றுநோய்களைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள், தக்காளி, பீன்ஸ், க்ரீன் டீ உள்ளிட்ட பல உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.
0 comments:
Post a Comment