ஜேர்மனி அரசின் இந்த அறிக்கையின் மூலம், ஜேர்மனியில் எந்தநேரமும் வெவ்வேறு அளவிலான பயங்கரவாத தாக்குதல் என்பது சாத்தியம் என்பது தெளிவாகிறது்.
இதுபற்றி வல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், ஜேர்மனி எப்போதுமே இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் தொடர் கவனத்தில் தான் இருந்து வருகிறது என்றும் எனவே அவர்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுக்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகம் தழுவிய போராட்டத்தில் ஜேர்மனியின் பங்களிப்பினால் உந்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், போர் நடக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தினை சேர்ந்த ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து போர் அனுபவத்தோடு தற்போது நாடு திரும்பியிருக்கும் 150 போராளிகள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment