படத்தின் தலைப்பிலேயே ஒரு அழகான ‘கிரியேட்டிவிட்டி’யை புகுத்தியிருக்கிறார் இயக்குனர் பால்கி. தனுஷ் என்ற பெயரின் ஆங்கில எழுத்தின் கடைசி ‘SH’-ஐயும், அமிதாப் பச்சன் என்ற ஆங்கல எழுத்தின் முதல் ‘’AMITABH’ -ஐயும் இணைத்து படத்தின் டைட்டிலான ‘ஷமிதாப்’பை உருவாக்கியிருக்கிறார்.
ஷமிதாப் படத்தில் முதலில் தனுஷ் கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்ததாம். அப்போது அந்தக் கதாபாத்திரத்தின் பெயரை ‘ஷாநவாஸ்’ என வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்களாம்.
அதன் பின் அந்த வாய்ப்பு தனுஷுக்குப் போன பிறகு தனுஷின் கதாபாத்திரப் பெயரை ‘டேனிஷ்’ என்று வைத்திருக்கிறார்கள். தனது இரண்டாவது ஹிந்திப் படத்திலேயே இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு தனுஷுக்குக் கிடைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர்களின் கூட்டணியில் இதற்கு முன் வந்த படங்களான ‘சீனி கம், பா’ ஆகிய படங்களும் பாடல்கள் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் இந்தப் படம் மூலம் ஒரு ஹீரோயினாக முதலில் இந்தித் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் இப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் ஒளிப்பதிவில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ‘ஐ’ படமும், பிப்ரவரி 6ம் தேதி ‘ஷமிதாப்’ வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திரையுலகம் அதிகம் எதிர்பார்க்கும் படமாக ‘ஷமிதாப்’ அமைந்துள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளையராஜா, பி.சி. ஸ்ரீராம், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் இருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயமாகும்.
0 comments:
Post a Comment