தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது கோலிவுட்டில் படங்கள் குவியும். ஆனால், இந்த முறை கிறிஸ்துமஸை குறி வைத்துள்ளது தமிழ் திரையுலகம். மீகாமன், வெள்ளகாரத்துறை, கயல், கப்பல் என 4 படங்கள் கோதாவில் குதித்துள்ளது. அப்படங்களை பற்றிய முன்னோட்டம் தான் இந்த தொகுப்பு.
மீகாமன்
தடையற தாக்க என்ற எக்ஸ்பிரிமெண்டல் படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் படம் தான் மீகாமன். படத்தின் தலைப்புக்கே பலபேருக்கு அர்த்தம் புரியவில்லை. சமீபத்தில் தான் தெரிந்தது மீகாமன் என்றால் கப்பல் கேப்டனை குறிக்கு ஒரு வகை சொல்லாம்.
இப்படத்தின் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கிளாமருக்கு ஹன்சிகா இருக்கிறார். இப்படமும் தடையற தாக்க போலவே ஒரு ராவ்வான கதையாக தான் இருக்கும் என ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது. தமனின் இசையில் பாடல்கள் கொஞ்சம் சுமார் தான். இருந்தாலும் மிகப்பெரிய ஸ்டார் கேஸ்ட் இருப்பதால் இந்த படம் தான் அனைவரின் 1ஸ்ட் சாய்ஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளகாரத்துறை
நடித்த 4 படங்களையும் ஹிட் கொடுத்து விட்டு முதன் முறையாக காமெடி களத்தில் குதித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இப்படத்தை மினிமம் கேரண்டி இயக்குனர் எழில் வழக்கமான தன் சூரி, சிங்கம் புலி காமெடி பட்டாளத்துடன் களம் கண்டுள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக இன்றைய இளைஞர்களின் கனவு நாயகியாக இருக்கும் ஸ்ரீதிவ்யா இப்படத்தில் நடிப்பது கூடுதல் பலம். டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவெ நல்ல வரவேறை பெற்றுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் சென்று வரும் படமாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கயல்
சினிமா ரசிகர்களுக்காகவே தீனி போடும் வகையில் வெளிவரவிருக்கும் படம் தான் கயல். மைனா, கும்கி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் தான் கயல். இப்படத்தில் கயலாக ஆனந்தி நடித்திருக்கிறார்.
பிரபு சாலமன் என்றாலே விஸ்வல், லொக்கேஷன் தான் ஸ்பெஷல். அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது நம் கண்ணீற்கு செம்ம விருந்து காத்திருக்கிறது என்று. மேலும் சுனாமி காட்சிகள் இடம்பெறுவதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
கப்பல்
இப்படத்தில் பெரிய நடிகர் பட்டாளம் தான் இல்லை. வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகி புதுமுகம். ஆனால், இப்படத்தின் இசையை வெளியிட்டவர்கள் விஜய், விக்ரம். அது எப்படி சாத்தியம் என்றால், இப்படத்தை வெளியிடுவது வேறு யாரும் இல்லை, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான்.
அவரின் உதவி இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் முழுவது டார்க் ஹுயுமர் நிறைய இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் கோலிவுட் ரசிகர்களை த்ரில், ஆக்ஷன், காமெடி, லவ் என அனைத்து விதங்களிலும் கவர இத்தனை படங்கள் வரவிருக்கிறது. இதில் எந்த படம் நம்மை திருப்திபடுத்தும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment