2022ம் ஆண்டு கால்பந்து உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான உள்கட்டுமான பணிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
கத்தாருக்கு உலகக்கிண்ண போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்ததே பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நேபாள தொழிலாளிகள் உயிரிழந்து வருவதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு கட்டுமானப் பணிகளில் போதிய பாதுகாப்பு இன்மையினால் பலியாகும் தொழிலாளர்கள் விகிதம் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்டோராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் எண்ணிக்கைகளில் இந்திய, இலங்கை, வங்கதேச தொழிலாளர்கள் இல்லை.
கடந்த ஆண்டு இந்தப் பத்திரிக்கை கத்தார் நிர்வாகிகளின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்திய பிறகு கத்தார் நிர்வாகம் தகுந்த முறையில் சீரமைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.
இந்நிலையில் சீர்திருத்தங்கள் தங்களது தேவைக்கேற்ப மட்டுமே கத்தார் அரசு செய்துள்ளது என்றும், 50 டிகிசி செல்சியஸ் வெயிலில் கூடுதல் நேரம் வேலை வாங்குவது பற்றி எந்த ஒரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சாடியுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 2014 முதல் நவம்பர் மாதம் பாதி வரை சுமார் 157 நேபாளப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர் என்று நேபாள் நாட்டு அயல்நாட்டு பணி நியமன வாரியம் கூறியுள்ளது.
இதில் 75 பேர் மாரடைப்பினால் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும், 34 பேர் பணியிட விபத்துகளில் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த ஆங்கில பத்திரிக்கையின் கணக்குகளின் படி 188 பேர் இந்த ஆண்டில் நவம்பர் முடிய பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு 168 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், தோஹாவுக்கு பிழைப்பு தேடிச் செல்லும் தொழிலாளர்கள் பலருக்கு பேசிய ஊதியம் கிடைப்பதில்லை என்பதும் ஒரு புறம் அவலத்தைக் கூட்டியுள்ளது.
0 comments:
Post a Comment