ஆண்டுதோறும் 1980களின் ஹீரோ – ஹீரோயின்கள் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்வது வாடிக்கை. ஒவ்வொரு வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரையுலக நடிகர்கள் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.
அப்போது, புகைப்படக்காரர்கள், வீடியோ உள்ளிட்ட யாருமே உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நடிகர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வார். கடந்த ஆண்டிற்கான சந்திப்பு பொறுப்புகளை சந்திப்பை மலையாள நடிகர் மோகன்லால் ஏற்றுக் கொண்டார். சந்திப்பிற்கான உடை அலங்கார தீம் ‘கடற்கரை உடை’ என்று தீர்மானித்து, ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அணிந்து வந்திருந்தார்கள்.
அதே போல, இந்த ஆண்டுக்கான சந்திப்பை நடிகை ராதிகா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இம்முறை பெரிய விழா போன்று கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். டிசம்பர் 24ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் இச்சந்திப்பு நடைபெற இருக்கிறது.
இதில் 1980களில் பிரபல இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரை கவுரவப்படுத்த இருக்கிறார்கள். பாலசந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இதில் கலந்துகொள்ள முடியாது. அதேபோன்று இந்த இயக்குநர் வரிசையில் பாக்யராஜ் பேரும் இருந்திருக்கிறது.
தனது குரு பாரதிராஜா கவுரவப்படுத்தும்போது, நானும் வாங்கினால் சரியாக இருக்காது, வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இம்முறை நடைபெறும் விழாவில், தற்போதுள்ள நடிகைகள் அந்தக் கால பாடல்களுக்கு நடனமாடும் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியினை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் போட்டிக்கு இடையே வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment