மூத்ததம்பி ஸ்ரீஸ்கந்தராஜா ( வயது- 59), திலகேஸ்வரி (வயது--48) ஆகிய தம்பதியினர் லண்டனில் உள்ள ஐசில்வர்த்தில் (Isleworth) வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் லண்டன் சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நிய செலாவணியின் மூலம் ஸ்ரேலிங் பவுண்ட்டுக்கு இணையாக யூரோ நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணப்பரிமாற்ற சேவையை செய்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் இந்த போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பணப்பரிமாற்றத்தினைச் செய்து கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்களது இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை 145 மில்லியனாக எட்டியவுடன் இவ்விடயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களது அலுவலகத்தை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
சோதனையில் 1,00,000 பவுண்ட்டுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து 2,50,000 பவுண்ட்டுகளையும், நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து இத்தம்பதியினரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக இவர்களின் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த சவுத் ஆரக் கிரவுன் நீதிமன்றம், மூத்ததம்பிக்கு 12 வருட சிறைதண்டனையும் அவரது மனைவி திலகேஸ்வரிக்கு 7 வருட சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் உடந்தையாக இருந்த மெர்லின் என்ற பிரிட்டிஷ் பெண்ணுக்கு 3 ½ வருடம், அவரது சகோதரிக்கு 2 வருட சிறைதண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment