↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் (சி.சி.எல்.) இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதியது.

டாஸ் வென்ற தெலுங்கு வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியில் ரமணா மற்றும் விக்ராந்த் களம் இறங்கினார்கள். இதில் ரமணா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய விஷ்ணு, விக்ராந்துடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்கள். விஷ்ணு 21 ரன்கள் எடுத்த நிலையில் சாம்ராட் பந்தில் அகிலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக 3-வது விக்கெட்டுக்கு சாந்தனு களம் இறங்கினார். சென்னை அணியின் ஸ்கோர் 62 ரன்கள் இருந்தபோது விக்ராந்த் 23 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் சிறிது நேரத்திலேயே சாந்தனுவும் 21 ரன்களில் அவுட் ஆனார். 

அதன்பின் களம் இறங்கிய பிருத்வி மற்றும் ஜீவா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். இறுதியில் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தெலுங்கு வாரியர்ஸ் அணி சார்பாக பிரின்ஸ் மற்றும் சச்சின் ஜோசி களம் இறங்கினார்கள். இவர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். சச்சின் ஜோசி 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜீவா பந்தில் ஷாமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவருடன் இணைந்து விளையாடிய பிரின்ஸ் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்த களம் இறங்கிய ரகு 11 ரன்களில் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுதிர் பாபு மற்றும் கேப்டன் அகில் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.

ஆட்டத்தின் இறுதியில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சுதிர் 35 ரன்களுடனும், அகில் 32 ரன்களுடன் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு வாரியர்ஸ் முதல் சாம்பியன் பட்டத்தை ருசித்து உள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top